Vidiyal Celebration

சேலம் அரசினர் பொறியியல் கல்லூரியில், தமிழ் இலக்கிய மன்றம் சார்பில் "விடியல்"எனும் விழா நடைபெற்றது... இதில் மாணவர்களின் படைப்புகள் அடங்கிய அகரம் இதழ் வெளியிடப்பட்டது.... அதனுடன் சேர்த்து விடியல் விழாவிற்கான இலச்சினையும்.... கல்லூரியில் பயிலும் 3 மாணவர்களின் புத்தகங்களும் வெளியிடப்பட்டது.... இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பட்டிமன்ற பேச்சாளர் சன் டிவி புகழ் கவிதா ஜவகர் அவர்கள் கலந்து கொண்டு மாணவர்களுக்கு சிந்தனை பற்றியும், புத்தகங்கள் அவசியம் பற்றியும் பேசினார்.... மேலும் வில்லுப்பாட்டு, நாடகம், பொம்மலாட்டம் ஆகிய போட்டிகளும், பறை இசை நிகழ்ச்சியும் நடத்தப்பட்டது..... கல்லூரியின் முதல்வர் ஜா. விமலா ரோசலின் அவர்கள் தலைமை வகிக்க.... பொறுப்பாசிரியர் இ. கல்பனா அவர்கள் ஆண்டறிக்கை வாசித்தார்.... உடன் தமிழ் இலக்கிய மன்றத்தின் செயலர்கள் செல்வன். ச. அருணாச்சலம் மற்றும் சௌ. சிவரஞ்சனி ஆகியோர் உடன் இருந்தனர்.

Go to top
Untitled Document