Skip to main content

சேலம், அரசு பொறியியற் கல்லூரியில் 22.03.2024 அன்று தமிழ் இலக்கிய மன்றத்தின் சார்பில் ‘விடியல்’ விழா மிகச் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது

சேலம், அரசு பொறியியற் கல்லூரியில் 22.03.2024 அன்று தமிழ் இலக்கிய மன்றத்தின் சார்பில் ‘விடியல்’ விழா மிகச் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. தமிழ் இலக்கிய மன்றத்தின் செயலாளர், ச. செந்தில் முருகன் என்ற இயந்திரவியல் துறை மாணவர் வரவேற்புரை வழங்கினார். இவ்விழாவில் திரைப்பட நடிகர் மற்றும் பட்டிமன்ற பேச்சாளர், முனைவர் . கோ. பழனி அவர்கள் சிறப்பு விருந்தினாரக் கலந்து கொண்டு விழா பேருரை ஆற்றினார். இவ்விழா கல்லூரி முதல்வர், முனைவர். இரா. விஜயன் அவர்களின் தலைமையில், பொறுப்பாசிரியர் முனைவர். ப. சக்திவேல் அவர்களின் முன்னிலையில் சிறப்பாக நடைபெற்றது. நம்முடைய பழைய நினைவுகளை நினைவுகூறும் வண்ணம் ‘அது ஓர் அழகிய நிலாக் காலம்’ என்ற தலைப்பில் விழா சீரும் சிறபோடும் நடைபெற்றது. தமிழரின் பண்பாடு மற்றும் பாரம்பரியத்தை வெளிக்காட்டும் வகையில் வில்லுபாட்டு, பாவைக்கூத்து, நாடகம், மௌனநாடகம், பறை, சிலம்பம், இசை, நடனம் எனப் பல்வேறு கண்கவர் கலைநிகழ்ச்சிகள் மாணவகளால் நடத்தப்பட்டன. இக்கல்லூரியின் துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள், அமைசுப்பணியாளர்கள் மற்றும் 1000 மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு, ஆரவாரத்தோடு விழாவைக் கொண்டாடி மகிழ்ந்தனர். தமிழ் இலக்கிய மன்றத்தின் செயலாளர், ம. செளந்தரியா என்ற அமைப்பியல் துறை மாணவி நன்றியுரை வழங்கினார்.